தெதுறு ஓயா பாலமின்மையால் பொதுமக்கள் சிரமம்
31-08-2012 12:19 PM
Comments - 0       Views - 285

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கடிகாவ பிரதேசத்தில், நிகவரெட்டி பிரதேச செயலாளர் பிரிவினையும் பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவினையும் பிரிக்கும் தெதுறு ஓயாவிற்கு மேலாக பாலமொன்று இதுவரை அமைக்கப்படாமையினால் கடிகாவ, மதவாக்குளம், நம்முனுவாவ, வல்பொதுவௌ, வீரபொக்குன பிரதேச மக்கள் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்வதற்கும், விவசாய உற்பத்திகளினை சந்தைப்படுத்துவதற்கும் பெரிதும் சிரமப்படுவதாக கடிகாவ கிராம எழுச்சி சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மதவாக்குளம் மற்றும் நம்முனுவாவ பிரதேச பாடசாலை மாணவர்கள் பலர் இவ் ஆற்றின் குறுக்காகவே வல்பொது வௌ, பாடசாலைக்கு வருகைத்தருவதாகவும் இவர்கள் கோடைக்காலங்களில் ஆற்றினூடாக நடந்து வருவதாகவும், ஆற்றில் அதிகம் நீர் உள்ள போது பெரல்களினூடாக அமைக்கப்பட்ட படகு போன்ற ஒன்றினூடாக பாடசாலைக்கு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கடிகாவ பிரதேசத்திலிருந்து ஆற்றினூடாக மதவாக்குளம் செல்ல 7 கிலோ மீற்றர் தூரமும், வீதியினூடாக மதவாக்குளம் செல்வதற்கு 37 கிலோ மீற்றர் தூரமும் பயனிக்க வேண்டியுள்ளது.

கடிகாவ பிரதேசத்தில் தெதுறு ஓயாவிற்கு மேலாக பாலமொன்று அமைப்பதற்காக காலத்துக்கு காலம் பல முறை அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளதாக கிராம எழுச்சி சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
"தெதுறு ஓயா பாலமின்மையால் பொதுமக்கள் சிரமம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty