வெள்ளிக்கிழமை, 25 மே 2012

அதிவேக நெடுஞ்சாலையில் கல்வீச்சுகளால் 4 வாகனங்கள் சேதம்

 

(சுபுன் டயஸ்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ எனும் இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கல்வீச்சுகளினால் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை  4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மீது கற்களை வீசவேண்டாம் என பொலிஸ் எச்சரித்த அதே தினத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நவம்பர்  27 ஆம் திகதி இந்நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன்பின் இத்தகைய கல்வீச்சுகளால் 57 வாகனங்கள் சேதமடைந்ததுடன் 18 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் 1969 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் உடனடியாக தகவல் தருமாறு போக்குவரத்து பொலிஸார் கோரியுள்ளனர்.

 

Views: 3474

Comments   

 
0#meenavan2012-01-17 19:31
அதிவேக சாலை வருமானம், சேதமடைந்த வாகனங்களினது நஷ்ட ஈடு வழங்கலுக்கும் பயன்படுமா? காப்புறுதி நிறுவனங்கள் இனிமேல் அதிவேக பாதை வாகனங்களுக்கு விசேட காப்புறுதிகளை அறிமுகம் செய்வார்களோ?
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.