முடிவுறா முகாம் வாழ்க்கை...
10-07-2012 12:46 PM
Comments - 0       Views - 439

வவுனியா, செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி முகாமில் இன்னமும் தங்கவைக்கப்பட்டுள்ள 1700 குடும்பங்களையும் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இதுவரையில் அம்மக்கள் மீள்குடியேற்றப்படாதுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நடாளுமன்றக் குழு, மெனிக்பாம் முகாமுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள மக்களை ஜூன் 30க்குள் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் உறுதியளித்திருந்தார்.

தங்களது சொந்த இடங்களில் இன்னமும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாமையினால் தங்களை மீள்குடியேற்ற முடியாதுள்ளதாக உரிய அதிகாரிகள் தெரிவித்ததாக மெனிக்பாம் முகாமிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். (ரொமேஸ் மதுசங்க)

"முடிவுறா முகாம் வாழ்க்கை..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty