அமெரிக்க தூதுவர் மட்டு. மாவட்டத்திற்கு விஜயம்
19-06-2012 03:56 PM
Comments - 0       Views - 389

(எம்.சுக்ரி, ஆர்.அனுருத்தன், ஸரீபா, ரி.லோஹித்)


பதவி காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்ரீசியா ஏ. புட்டேன் இன்று இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, மட்டு - திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் மாவட்டத்தின் தற்போதய நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை, வாகரை பிரதேசத்திற்கும் அமெரிக்க தூதுவர்  இன்று காலை நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது,
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாகவும் யூ.எஸ்.எயிட். நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வெதுப்பகத்தை அமெரிக்க தூதுவர் திறந்துவைத்தார்.

வாகரை பிரதேசத்தில் நீண்ட நாளாக காணப்பட்ட வெதுப்பக குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் பிரதேச பென்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவம் சுமார்  90 இலட்;சம் ருபா செலவில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினால் குறித்த வெதுப்பகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெதுப்பகமானது பால்சேனை மாதர் சங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெதுப்பக உணவு பொருட்க்களை தயாரிப்பதற்க்கான பெறுமதி வாய்ந்த நவீன இயந்திர சானங்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இதேவேளை, யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு, பாலமீன்மடு வெளிச்ச வீட்டு பகுதியில் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை அமெரிக்க தூதுவர் இன்று மாலை திறந்துவைத்தார்.

சுமார் ஐந்து மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் இந்த சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


"அமெரிக்க தூதுவர் மட்டு. மாவட்டத்திற்கு விஜயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty