நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு திடீர் விஜயம்
12-07-2012 04:38 PM
Comments - 3       Views - 1289

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் திடீர் விஜயமொன்றை இன்று வியாழக்கிழமை மேற்கொண்டார்.

இதன்போது, பாடசாலை பௌதீக வள அபிவிருத்தி சம்பந்தமாக கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா மற்றும் முகாமைத்துவ குழுவினருடன் இன்று கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு, கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் சுமார் 80 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்ட மூன்று மாடி நிர்வாக கட்டிடம் அமைத்தல், 1,000 பாடசாலை திட்டத்தின் கீழ் மூன்று மாடி வகுப்பறை தொகுதிகளை கொண்ட கட்டிடம் அமைப்பத்தல், மைதான அபிவிருத்தி மற்றும் சுற்றாடலை அழகுபடுத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை வலய கட்டிட பொறியியலாளர் எம்.சி.எம்.நவாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


"நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு திடீர் விஜயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (3)
jaks 14-07-2012 12:05 PM
மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்...................
வெ
Reply .
1
7
nifras 14-07-2012 08:35 PM
ஒரு பலனும் இல்லை
Reply .
1
6
saurav 18-07-2012 02:40 AM
சும்மா வெத்து வேட்டு
Reply .
0
2
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty