தோணா முகத்துவார பிரதேச இறங்கு துறையின் நீர்மாண பணிகள் துரிகதியில் முன்னெடுப்பு
17-09-2012 09:11 AM
Comments - 0       Views - 964

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்ட கரையோர ஆழ்கடல் மீனவர்களின் மிக நீண்ட காலத்தேவையாக இருந்துவந்த சாய்ந்தமருது தோணா முகத்துவார பிரதேசத்தில் மீனவர் படகு இறங்கு துறையின் நிர்மாண பணிகள் தற்போது துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

கடல்தொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு இபாட் நிறுவனத்தின் அனுசரணையில் இந்நிர்மாண பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

நிர்மாண பணிகளுக்கான முதற்கட்டமாக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இப்பிரதேச ஆழ்கடல் மீனவர்கள் கடல் கொந்தளிப்பு காலங்களில் தமது இயந்திர படகுகளை  வெளிமாவட்டங்களிலுள்ள படகு இறங்கு துறைகளில் தரித்து வைத்தனர்.

இதன் முதற்கட்ட நிரமாண பணிகள் செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் நிறைவடையவுள்ளதாக இத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரிவித்தார்.


"தோணா முகத்துவார பிரதேச இறங்கு துறையின் நீர்மாண பணிகள் துரிகதியில் முன்னெடுப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty