நுவரெலியா – நானுஓயா நகரங்களுக்கிடையில் பனிமூட்டம்
10-07-2012 04:59 PM
Comments - 0       Views - 398

(ஆர்.கமலி)


மலையகத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையுடன் கூடிய  காலநிலை காரணமாக பல பகுதிகள் பனிமூட்டமாக காணப்படுகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நுவரெலியா - நானுஓயா நகரங்களுக்கிடையில் அவ்வப்போது பனிமூட்டம் காணப்பட்டது.

இதனால் நுவரெலியா - நானுஓயா பாதையில் பயணித்த வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர். எதிரில் வரும் வாகனங்களை மிக அருகில் வரும்வரை அவதானிக்க முடியாமல் வாகன சாரதிகள் சிரமத்தை எதிர்நோக்கியதுடன்,   மக்கள் பாதையைக் கடப்பதிலும் சிரமத்தை எதிர்நோக்கினர்.
"நுவரெலியா – நானுஓயா நகரங்களுக்கிடையில் பனிமூட்டம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty