வெள்ளிக்கிழமை, 25 மே 2012

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் குடும்பம் இலங்கைக்கு தப்பி வந்தது

 

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் மனைவியும் மகள்களும் இன்று கொழும்பை வந்தடைந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாலைதீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பதவியிலிருந்து மொஹமட் நஷீட் ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. அதன்பின்னரும் அங்கு மொஹமட் நஷீட்டின் ஆதரவாளர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டின் குடும்பத்தினர் பாதுகாப்பு தேடி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

'மொஹமட் நஷீட்டின் மனைவியும் இரு பிள்ளைகளும் இங்கு வந்தடைந்ததாகவும் அவர்கள் நேற்றுமாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாகவும் பந்துலய ஜயசேகர ஏ.எவ்.பியிடம் கூறியுள்ளார்.

மொஹமட் நஷீட்டினதும் அவரின் குடும்பத்தினரதும் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ கரிசனை கொண்டுள்ளார் என பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

மொஹமட் நஷீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹிட் ஹஸனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியதாகவும் அதற்கு ஜனாதிபதி வாஹிட் ஹஸன் சம்மதித்தாகவும் பந்துல ஜயகேர கூறினார்.

 


 

Views: 3630

Comments   

 
0#emarat2012-02-10 10:55
எங்க ஊர்ல வெல்ல வான் ல தான் ஆட்கடத்தல் நடக்கும் .... அதனால வெள்ளை படகுல வந்து ஒங்கள கடத்திட்டு திருப்பி மாலை தீவுக்கு போனா அது நம்ம ஊர்காரங்க இல்ல....சொல்லி வைக்கிறோம் .
Reply
 
 
0#ibnuaboo2012-02-10 22:22
பதவி இறக்கப்பட்டவற்கு இங்கு பாதுகாப்பு அளிப்பத்யு ஒன்றும் முக்கிய செய்தி இல்லை. இது மாலை தீவு புதிய அரசுக்கும் இலங்கைக்கும் ராஜ தந்திர உறவில் பிணக்கை உண்டாக்கும். ஏனென்றால் அங்கு நீதிமன்ற கைது உத்தரவின் கீழ் உள்ளவர் இவர்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.