காட்டுச் சட்டத்திற்கு சர்வதேச சமூகம் பயப்படாது: தயாசிறி
25-03-2012 05:10 PM
Comments - 2       Views - 1373

                                                                                                
                                                                                                 (ஹபீல் பரீஸ்)

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்வதற்கு புதிய தேர்தலை அல்லது சர்வஜன வாக்கெடுப்பை கோரிக்கை முட்டாள்தனமானது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தாயசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இது மிக முட்டாள்தனமானது. அத்துடன் இது எமது பிரச்சினைகளைத் தீர்க்காது எனவும் அவர் தெரிவித்தார். அதேவேளை காட்டுச்சட்டத்தை சர்வதேச  சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது. அதற்கு சர்வதேச சமூகம் பயப்படாது' எனவும் அவர் தெரிவித்தார்.

' முதலாவதாக இந்த அரசாங்கம் எவ்வாறு தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றி பெற்றது என்பதை நாம் அறிவோம். அவர்கள் அனைத்தையும் சட்டவிரோதமாக செய்து மக்களின் உண்மையான விருப்பத்தை அகற்றினார். இரண்டாவதாக, இத்தீர்மானம் குறித்து விடயங்களை புதிய வாக்கெடுப்பு எவ்வாறு தீர்க்கும்?' என அவர் கேள்வி எழுப்பினார்.

பெருமை மிக்க நாடாகிய நாம் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஏமாற்றுகளின் காரணமாக முதல் தடவையாக, சர்வதேச சக்திகளிடமிருந்து அறிவுறுத்தல்களை பெற நேரிட்டுள்ளது. மக்களை கிளர்ந்தெழச் செய்து சர்வதேச சதி என்ற திரைக்குப் பின்னால் மறைந்துகொள்கிறது. இது வாக்களிப்பில் உதவாது. இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.  இனி இதுபோன்ற முட்டாளத்தனமான பேச்சுகளை பேசுவதற்குப் பதிலாக இதுவரை கூறப்பட்டு வந்ததை பின்பற்ற வேண்டும்.  என அவர் கூறினார்.

சர்வதேச சமூகமானது இந்நாட்டிற்கு எதிரானது அல்ல எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கே அது எதிராகவுள்ளதாகவும் குருநாகல் மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச சமூகத்தை தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவது, அரசாங்கத்தின் அமைச்சரால்கூட இன்றுவரை மேற்கொள்ளப்படும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் என்பன நிறுத்தப்பட வேண்டும். இது குறைந்தபட்சம் எமது நாட்டின் மீதான நம்பகத்தன்மைக்கு உதவும் எனவும் தயாசிறி ஜயசேகர கூறினார்.
இப்போது தேர்தல் நடந்து புதிய ஆணையை அரசாங்கம் பெற்றால்கூட சர்வதேச சமூகத்தின் மனதில் அது மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

' இப்போது அவர்கள் தேர்தல் நடத்தி, சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி வென்றுவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதனால் சர்வதேச சமூகத்தின் மனதில் மாற்றம் ஏற்படுமா? அது எமதுபிரச்சினைகளை தீர்க்குமா என அவர் கேள்வி எழுப்பினார்.

காட்டுச் சட்டமானது இந்த நாட்டில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், சர்வதேச சமூகத்திற்கு எதிராக அதை தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது. ஏனெனில் இதற்கு அவர்கள் பயப்படப்போவதில்லை' என தயாசிறி ஜயசேகர கூறினார்.

"காட்டுச் சட்டத்திற்கு சர்வதேச சமூகம் பயப்படாது: தயாசிறி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
ashraff 26-03-2012 03:22 PM
தயாசிறி அவர்களே !உபதேசம் செய்வது எளிது. அதை நடைமுறைப்படுத்துவது கடினம். இது உங்கள் எல்லோருக்கும் பொருந்தும்.அரசியல் என்பது பெரும்பாலும் சந்தர்ப்பவாதம்தானே. எனினும் தேர்தல்கள் பற்றிய உங்கள் கருத்து உண்மையானதாக இருக்கலாம்.
Reply .
0
0
pasha 26-03-2012 03:30 PM
சதாம் ஹுசைனும் ஒரு வாக்கெடுப்பு நடத்தி 99% மக்கள் அவருடன் உள்ளது என்று காடினார் ஆனால் நடந்தது என்ன?
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty