innerback
innerback

இஸட் புள்ளி சூத்திரத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
10-05-2012 09:20 PM
Comments - 0       Views - 429
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
கடந்த 2011 ஒகஸ் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் பரீட்சார்த்திகளின் இஸட் புள்ளியை கணிப்பதற்கு பிழையானது, ஏற்கமுடியாதது என கூறப்படும் சூத்திரத்தை பயன்படுத்தியமைக்கு எதிரான உரிமை மீறல் மனுமீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இதன்போது பிரதம நீதிபதி ஷிராணி ஏ.பண்டாரநாயக்கா, நீதிபதி என்.ஜி.அமரதுங்க மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோர் நீதவான் குழாமில் இருந்தனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 16 பேரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரும் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர், பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.ஓ.தாட்டில் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
"இஸட் புள்ளி சூத்திரத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty