மணல் ஏற்றிச்செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை; அரசாங்கம் தீர்மானம்
10-05-2012 09:52 PM
Comments - 1       Views - 737
'மணல் ஏற்றிச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தவிர்க்கும் வகையில், இன்று வியாழக்கிழமை முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்செல்வதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கியுள்ளது' என்று சுற்றாடல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாப்பா, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இதேவேளை, 'மணல் ஏற்றிச் செல்வதற்கு அனுமதிப்பத்திரம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு சிறந்த தீர்மானமொன்றை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு உத்தரவிட்டுள்ளார்' என்று ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இந்நிலையில், மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது மேலும் குறிப்பிட்டார்.
"மணல் ஏற்றிச்செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லை; அரசாங்கம் தீர்மானம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
musammath 11-05-2012 05:57 PM
good
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty