கிளிநொச்சியில் இடம்பெற்ற கொலை குறித்து விசாரணை நடத்த கனடா வலியுறுத்தல்
12-05-2012 12:22 PM
Comments - 0       Views - 531
 கடந்த வாரம் வடக்கில் கொல்லப்பட்ட கனேடிய பிரஜையின் மரணம் குறித்து முழுமையான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளுமென தான் எதிர்பார்ப்பதாக கனடா தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரும் கனேடிய பிரஜையுமான அந்தனிபிள்ளை மஹேந்திரராஜா கடந்தகால யுத்தத்தில்  இழந்த சொத்துக்களை மீளப்பெறுவதற்காக இலங்கைக்கு வந்த போது கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் அவரின் சொத்துக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வருட யுத்தத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை இராணுவமானது தோற்கடித்தது.

கிளிநொச்சிக்கு வெளியில் வைத்து குழுவொன்றினால் மஹேந்திரராஜா கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லீ பி.பி.சி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

கனடா பிரஜையின் கடந்த வார கொலைக்குறித்து முழுமையான புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன் அதன் முன்னேற்றங்களை கனடா அவதானித்துக்கொண்டிருக்கும் என இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ குறிப்பை தான் அனுப்பிவைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்த சிலரினால் மஹேந்திரராஜா தாக்கப்படுவதை உள்ளூர்வாசிகள் சிலர் அவதானித்துள்ளது தொடர்பில் வடக்குப் பகுதி ஊடகங்கள் மற்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மேற்படி குழவினரிடமிருந்த தப்பிப்பதற்காக மிகவும் போராடியதாகவும் அவரது அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியில் கடைகளின் உரிமையாளராக இருந்த மேற்படி நபர் யுத்ததிலிருந்து தப்பிப்பித்து கனடாவில் குடியேறினார்.

அவரது சொத்துக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துக்கொண்டதுடன் தற்போது அவை பல்பொருள் அங்காடி (சுப்பர்மார்கெட்) நிறுவனம் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் வசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹேந்திரராஜா, தமது சொத்துக்களை மீட்பதற்காக இலங்கை வந்ததுடன் வீடொன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த நிலையிலே கொல்லப்பட்டுள்ளார்.

இவ்விடயங்கள் மற்றம் புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையத்தளதம் குறித்து இராணுவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இராணுவ புலனாய்வுத் தரப்பினரால் அவரது நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் அதிகமான கருத்துக்களை வெளியிட பொலிஸ் பேச்சாளர்  மறுத்துவிட்டார்.  ஆனால் நான்கு புலானாய்வு குழுக்குள் விசாரணைகளை மேற்கொள்வதாகவும்  எனினும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
"கிளிநொச்சியில் இடம்பெற்ற கொலை குறித்து விசாரணை நடத்த கனடா வலியுறுத்தல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty