புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் 5 வருடங்கள் அமெரிக்க சிறையிலிருந்த நபர் விடுதலை
12-05-2012 01:26 PM
Comments - 0       Views - 541
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 6 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பிரஜையான இலங்கையர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கெனவே சிறையில் கழித்த காலம் மாத்திரம் அவருக்கு சிறைத்தண்டனையாக விதிக்கப்பட்டது.

இலங்கையில் பிறந்த 55 வயதான கருணாகரன் கந்தசாமி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை வழங்க சதிசெய்தார் என்ற குற்றச்சாட்டை 2009 ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டார்.

அவர்  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னிலை அமெரிக்கப் பிரதிநிதி எனவும் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் நியூயோர்க் புருக்கின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுநர் நேற்று வாதாடினார்.

எனினும் கருணாகரன் இராணுவர ரீதியான உதவிகளை அல்லாமல் இலங்கையிலுள்ள சிறுபான்மை தமிழ் மக்களுக்க மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலேயே அவர் சம்பந்தப்பட்டுள்ளார் என தான் கருதுவதாக நீதிபதி ரேமன்ட் டியரி கூறினார். வழக்குத் தொடுநர்கள் கோரும் 20 வருட சிறைத்தண்டனை மிகையானது என அவர் தெரிவித்தார்.

'நான் எனது பச்சாதாபத்தை தெரிவிக்க விரும்பினேன். எனது குடும்பத்தினர் தொடர்ச்சியாக அச்சத்துடன் வாழ்ந்த ஒரு நாட்டில் நான் வளர்ந்தேன். எனது மக்களுக்கு உதவுவதே எனது நோக்கமாக இருந்தது' என தீர்ப்புக்கு முன்னர் கருணாகரன் கந்தசாமி கூறினார்.
"புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் 5 வருடங்கள் அமெரிக்க சிறையிலிருந்த நபர் விடுதலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty