innerback
innerback

வேலைவாய்ப்பு மோசடிகளை அம்பலமாக்கிய இந்திய தொழிலாளியின் மரணம்
12-05-2012 03:52 PM
Comments - 2       Views - 812
கம்பஹாவிலுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலையொன்றில் இந்திய ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தமை இலங்கைக்கு தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு, பரிதாபகரமான முறையில் தொழிற்சாலைகளில் தப்பவழியின்றி அகப்பட்டுக்கொள்ளும் முறையை வெளிப்படுத்தியுள்ளது.

கம்பஹா முத்தரகமவிலுள்ள கொன்பப் ஸ்டீல் பிரைவேட் லிமிடெட்டில் பணியாற்றிய ஜெய்பூரைச் சேர்ந்த 29 வயதான மனாஸ் குமார் மாலிக், தற்செயலாக மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.

இந்தியர் ஒருவரினால் நிறுவப்பட்ட இத்தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக கடந்த டிசெம்பர் மாதம் இவர் இலங்கைக்கு அழைத்து அழைக்கப்பட்டார். அத்தொழிற்சாலையில் பணியாற்றும் 153 பேரில் 101 பேர் இந்தியர்களாவர்.

1999 ஆம் ஆண்டு முதல் இயங்கும் மற்றொரு இரும்புத் தொழிற்சாலையான புஹுவெல்கா ஸ்டீல் இன்டஸ்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 300 பேரில் 200 பேர் இந்தியவர்களாவர். இரு நிறுவனங்களும் இலங்கை முதலீட்டுச் சபை மூலமாக நிறுவப்பட்டு, சலுகைகளை அனுபவிக்கும் நிறுவனங்களாகும்.

பொதுவாக இலங்கைக்கு தொழிலாளர்களை அழைத்துவருதற்காக மேற்கொள்ளப்படும் உத்தியானது பின்வரும் வகையில் உள்ளது. வறுமையிலுள்ள இடங்களில் ஆட்களை திரட்டுவதற்காக முகவர்களை பெறுவது. தொழிலாளருக்கு சுற்றுலா விஸாவொன்றை பெறுவது. அவருக்குப் புரியாத, ஆங்கில மொழியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்வது. கொழும்பிற்கு வந்தவுடன் வாகனமொன்றில் அடைத்தேற்றுவது.

அதன் பின்னரான செயற்பாடுகள் இலகுவானவையாகும். இலங்கை அதிகாரிகளின் உதவியுடன் சுற்றுலா விஸாவை வேலைவாய்ப்பு விஸாவாக மாற்றுவது. வேலைத்தளத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் அவரை தங்க வைப்பது. உறுதியளிக்கப்பட்டதில் ஒரு பங்கை ஊதியமாக வழங்குவது.

த ஹிந்து வினால் பார்வையிடப்பட்ட மாலிக்கின் ஒப்பந்தப்பத்திரம் முத்திரையிடப்பட்டதல்ல, வெற்று வெள்ளைத்தாளொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளருக்கு ஏற்படும் எந்த இழப்புக்கும் கம்பனி பொறுப்பாகாது என ஒப்பந்தத்தில் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. எந்த விபத்பதையும் காப்புறுதி கவனித்துக்கொள்ளும் எனக்கூறும் தெளிவற்ற வசனமொன்று உள்ளது. காப்புறுதி நிறுவனம் எது, காப்புறுதி கொடுப்பனவு எது, இழப்பீடு எவ்வளவு என எந்த ஊழியரும் அறிந்திருப்பதாக தெரியவில்லை.

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தலையிட்டதன் பின்னர், இதுதொடர்பாக முறைப்பாடொன்றை செய்வதற்கு தொழிலாளர்கள் தயாரானார்கள். காப்புறுதி தொகை 3 லட்சம் இலங்கை ரூபா (2.5 இலங்கை ரூபா 1 இந்திய ரூபா) எனத் தெரியவந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியரான கம்பனி உரிமையாளரிடம் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் 15 லட்சம் இந்திய ரூபாவை காப்புறுதித் தொகையாக கோரினார்கள். இறுதியில் 5 லட்சம் இந்திய ரூபாவுக்கு இணக்கம் காணப்பட்டது.

தனது சொந்தச் செலவில் சடலத்தை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் மாலிக்கின் சகோதரர்கள் இருவருக்குமான விமானப் பயணச் சீட்டுகளை வழங்குவதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அந்நிறுவனம் உறுதியளித்தது. (த ஹிந்து)

"வேலைவாய்ப்பு மோசடிகளை அம்பலமாக்கிய இந்திய தொழிலாளியின் மரணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
Karerem 13-05-2012 04:21 AM
இனிவரும் காலங்களில் இடைக்கிடை கம்பனிகளை அரசு திடீர் பரிசிலனை செய்வது சிறந்தது
Reply .
0
1
uvais.m.s 13-05-2012 04:35 AM
நல்ல விடயம். இலங்கையிலும் இப்படியான கம்பனிகள் இருக்கிறது என்பது இப்போது தான் தெரிகிறது. ஆனால், இலங்கையில் இருந்து அரபு நாடுகளில் வேலைக்கு வருபவர்களின் நிலைமை நீங்கள் இங்கே குறிப்பிட்டவைகளில் இருந்து நூறு மடங்கு அதிகமானவை. எவ்வளவோ வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையங்களை அரசாங்கம் தடை செய்தாலும் பல முகவர் நிலையq;கள் பொய்யான அக்கிரிமேன்ட் கொடுத்து தான் இங்கே அனுப்புகிறார்கள். அதை அரபு நாடுகளில் உள்ள கம்பெனியில் கொண்டுவத்து காட்டினாலே நம் கண்ணு முன்னாடியே கிழித்து போடுவார்கள். அதன் பின்னேர் அவர்கள் தரும் அக்கிரிமேண்டில் தான் கையெழுத்து போட வேண்டும். அதுவும் என்ன எழுதி இருக்கிறது என்பதே தெரியாது அரபு மொழி எத்தனை பேருக்கு படிக்க தெரியும்?? அதன் பின்னர் ஒவ்வொருவரும் படும் கஷ்டங்கள் யாருக்காவது தெரியுமா???? எப்படியாவது இங்கே உள்ள இலங்கை தூதுவராலயத்தில் சொன்னால் இங்கே உள்ள இலங்கை தூதுவர்கள் நல்ல நடவடிக்கை எடுக்கிறார்களா?? இலங்கை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இறக்கிறார்கள் ? ஊனம் ஆகிபோகிறார்கள் ? இவர்களுக்கெல்லாம் காப்புறுதி கிடைக்கிறதா?? எதுவுமே இல்லை நம் மக்களையும் கண் திறந்து பாருங்கள்.
Reply .
0
1




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty