நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இடம்பெற வேண்டும்: பிரபா கணேசன்
16-05-2012 11:01 AM
Comments - 1       Views - 327
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதன் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கூறியுள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது;

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதில் எனக்கு என்றும் உடன்பாடு இருந்ததில்லை. இருப்பினும் எமது அரசாங்கத்துடன் இருக்கும் ஏனைய கட்சிகளும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுக் கான முடியும் என கருதுவதனால் நாம் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இதனையே தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும். கடந்த 30 வருட காலமாக எமக்கு கிடைத்த பல சந்தர்ப்பங்களை நாம் பற்றிப்பிடிக்காமல் இழந்துள்ளோம். இம்முறை நாடாளுமன்ற தெரிவுக்குழு என்பதே கடைசி சந்தர்ப்பமாகும்.

வெளிநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு செல்வதையே விரும்புகின்றன. இருதரப்பினரும் நிபந்தனைகளற்ற கால எல்லைக்குட்பட்ட வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். வெறும் நிபந்தனைகளாளும் தமிழ் வீர வசனங்களினாலும் இழந்ததை மீட்டெடுக்க முடியாது. பல பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளை திருப்திபடுத்த முடியாது வெளிநாடுகளும் தோல்வியுற்றதை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வாறான பிடிவாதங்கள் மூலமாக கிடைக்கவிருந்த சமஷ்டி தீர்வினைக்கூட நாம் இழந்துள்ளோம்.

கூட்டமைப்பிலுள்ள தீவிரவாத போக்குகள் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்திற்கு நெருக்கடி கொடுப்பதாகவே தெரிகிறது. இவர்கள் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். வெறும் பதவிகளுக்காக தீர்வினை நோக்கி செல்ல தயங்குகிறார்கள். இதன் பின்விளைவை இவர்கள் அனுபவிக்க நேரிடும்.

எதிர்கால சந்ததியினர் கல்வித் திறனுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளை இன்றைய தலைவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுவே இன்று தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.

ஆகவே வெகுவிரைவில் பேச்சுவார்ததையில் ஈடுபட்டு பெறகூடிய தீர்வினைப் பெற்று கல்வித்துறையை வளர்த்து எமது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய கடமை தமக்கு உண்டு என்பதை வடக்கு கிழக்கு அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
"நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இடம்பெற வேண்டும்: பிரபா கணேசன் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
pottuvilan 16-05-2012 01:31 PM
ஐயா ஏதாவது புதிதாகா சொல்லுங்க?,
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty