மோசடி குற்றச்சாட்டில் மாத்தளை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம்
16-05-2012 04:55 PM
Comments - 0       Views - 447
மாத்தளை பொலிஸ் நிலையத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஊர்காவல் படை வீரர் ஒருவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் வெகுமதிக்கான நிதியை தவறான வழியில் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் அபயசிறிவர்தன இவர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளார். சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். (எம்.டபிள்யூ.சோமரட்ன)
"மோசடி குற்றச்சாட்டில் மாத்தளை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty