இஸட் புள்ளி வழக்குமுடியும் வரை மீள்மதிப்பீட்டு பெறுபேறு வெளியாகாது
22-05-2012 06:50 AM
Comments - 1       Views - 523
                                                                   (கெலும் பண்டார)

இஸட் புள்ளி தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவடையும்வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளை வெளியிட வேண்டாம் என  பரீட்சைகள் திணைக்களத்தை சட்டமா அதிபர் கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சுமார் 140,000 பேர் விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்கு  விண்ணப்பித்தனர். இம்மீள்மதிப்பீடுகள் முடிவடைந்துள்ள போதிலும் சட்டமா அதிபரின் ஆலோசனை காரணமாக பெறுபேறுகளை வெளியிட முடியவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

ஆசிரியர் தொழிற்சங்கமொன்றும் மாணவர்கள் சிலரும் இம்முறை இஸட் புள்ளிகள் தொடர்பாக வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

"இஸட் புள்ளி வழக்குமுடியும் வரை மீள்மதிப்பீட்டு பெறுபேறு வெளியாகாது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
ooraan 22-05-2012 03:35 AM
இலங்கையில் கொசுக்களின் தொல்லை தொடர்ந்து கொன்டு இருக்கின்ரது
Reply .
0
2
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty