ஆறாவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்
22-05-2012 12:36 PM
Comments - 0       Views - 333
(நவரத்தினம்)

கடந்த 17ஆம் திகதியில் இருந்து இலங்கையின் பல சிறைச்சாலைகளிலும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 810 தமிழ் அரசியல் கைதிகளில் 538பேர், கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 192பேர், களுத்துறையில் 22பேர், வவுனியாவில் 32பேர், புதிய மகசின் சிறைச்சாலையில் 180பேர், அநுராதபுரத்தில் 80பேர் மற்றும் வெலிக்கடை மகளிர் பிரிவில் 32பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் என்ற குற்றச்சாட்டிக் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தம்மீது குற்றமிருப்பின் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையேல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமாகும் வாய்ப்புள்ளாகவும் தெரியவருவதுடன், இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெறவுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கலந்துரையாடலில் சாதகமான நிலை ஏற்படாதுவிட்டால் தொடர்ந்தும் தமது உண்ணாவிரதம் இடம்பெறும் எனவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் நிலைமையினை புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
"ஆறாவது நாளாகவும் தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty