பொன்சேகாவுடன் ஹிருணிக்கா இணைவாரா?
22-05-2012 03:17 PM
Comments - 0       Views - 867
முன்னாள்  இராணுவத் தளபதி சரத் பொன்சோகாவின் அரசியல் நடவடிக்கைகளில் இணைவீர்களான என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிக்கா பிரேமச்சந்திரவிடம் கேட்டபோது இது தொடர்பாக தான் பின்னர் கருத்திற்கொள்ளவுள்ளதாக  பதிலளித்துள்ளார்.

முல்லேரியா சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்;றுக்கு வந்திருந்த ஹிருணிக்காவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 'இது குறித்து பின்னர் பார்க்கலாம். இப்போது எதுவும் தெரியாது' என  அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அதேவேளை துமிந்த சில்வாவின் வழக்குரைஞர்கள் தனக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தால் அல்லது துமிந்த சில்வாவை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அமுல்படுத்த தவறினால் தான் சர்வதேச ரீதியாக இவ்விடயத்தை கையாள வேண்டியிருக்கும் எனவும் ஹிருணிக்கா கூறினார்.


"பொன்சேகாவுடன் ஹிருணிக்கா இணைவாரா?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty