600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள் கொழும்பில் கைப்பற்றப்பட்டன
22-05-2012 05:31 PM
Comments - 0       Views - 624

(சுபுன் டயஸ்)


பல மில்லியன் ரூபா பெறுமதியான 600 ஆபிரிக்க யானைத் தந்தங்களை கொழும்பில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கென்யாவிலிருந்து டுபாய்க்கு அனுப்பப்படுவதற்கான இரு கொள்கலன்களில் இந்த யானைத் தந்தங்கள் அடைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கென்யாவின் மும்பாஸா துறைமுகத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்னர் இந்த கொள்கலன்கள் கப்பலேற்றப்பட்டிருந்தன.
மண் நிரப்பப்பட்ட சாக்குப் பைகளில் இந்த யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. யானைத் தந்தங்களின் உள்ளூர் விலை தெரியாததால் இவற்றின் உண்மையான பெறுமதியை மதிப்பிட முடியவில்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படிகொள்கலன்களில் ஒன்றை மாத்திரமே தாம் திறந்து பார்த்ததாகவும் அவற்றில் 600 தந்தங்கள் இருந்தாகவும் சுங்க அதிகாரியொருவர் கூறினார். மற்றைய கொள்கலனிலும் இதேயளவான யானைத் தந்தங்கள் இருக்கும் என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் இதில் இலங்கையர்கள் எவரும் சம்பந்தப்பட்மைக்கான தகவல் இல்iயெனவும் அவர் கூறினார். (படங்கள்:நிசால் பதுகே)


"600 ஆபிரிக்க யானைத் தந்தங்கள் கொழும்பில் கைப்பற்றப்பட்டன" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty