சரத் பொன்சேகாவை 'ஜெனரல்' என அழைக்கலாமா?: அரசாங்கம் விளக்கம்
24-05-2012 04:03 PM
Comments - 3       Views - 564
'இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை நிராகரிக்கும் வகையில் இந்த நாட்டில் ஆட்சியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் நடந்துகொள்ளவில்லை. சரத் பொன்சேகா விடயத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறே நடந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், இராணுவ நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் பறிக்கப்பட்ட, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் 'ஜெனரல்' பதவிநிலை மீண்டும் வழங்கப்படுவதென்பது சாத்தியப்படாத விடயமே' என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் பிரதியமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதன்போது, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை 'ஜெனரல் பொன்சேகா' என்று அழைக்க முடியுமா? என்று  ஊடகவியலாளர்கள் சிலர், அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,

'சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தின் கீழ் சுமார் 7,500பேருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட ஒருவர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நன்றாக அறிந்திருப்பார்.

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இதன் பிரகாரமே சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த மன்னிப்பின் மூலம் தேர்தலுக்கான உரிமை தவிர்ந்த அனைத்து உரிமைகளும் சரத் பொன்சேகாவுக்கு கிடைக்கப்பெறுகின்றது. இருப்பினும் இராணுவ நீதிமன்ற தீர்ப்பு விடயத்தில் ஜனாதிபதி ஒருபோதும் தலையிட மாட்டார்.

அதனால், இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட 'ஜெனரல்' பதவி மீண்டும் கொடுக்கப்பட வாய்ப்பு இல்லை' என்று கூறினார்.
"சரத் பொன்சேகாவை 'ஜெனரல்' என அழைக்கலாமா?: அரசாங்கம் விளக்கம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (3)
RAZA 24-05-2012 10:52 AM
வீரன் எப்போதும் வீரன் தான்
Reply .
0
2
didi 24-05-2012 11:58 AM
திரும்ப வழங்கக் கூடாது தான் .
Reply .
0
0
xlntgson 24-05-2012 10:01 PM
Kudavolai jana nayakam valup perugiradhu! edharkkum vaakku, ellaavatrukkum karutthu kanippu aanaal pakka saarbu atravargalai thaedip pidikka vaendum! needhavaangalukkum thaerdhal vaipparo?
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty