'ஆயுதம் தூக்கியவர்கள் பயங்கரவாதிகளானால் அரசியல் தளத்தில் பலர் பயங்கரவாதிகளாக காணப்படுவர்'
24-05-2012 05:21 PM
Comments - 0       Views - 312
'ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அடையாளம் காண்பாரானால் இன்றைய அரசியல் தளத்தில் உள்ளவர்களில் அநேகர் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்படுவர்' நவ சம சமாஜக் கட்சி கூறியுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலிறுத்தி எதிர்வரும் 29ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்திற்கு சகலரினதும் ஒத்துழைப்பையும் வழங்குமாறும்  நவ சம சமாஜக் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


'இந்த நாட்டில் நடைபெற்ற ஆயுத கிளர்ச்சிகளில் சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளில் முக்கிய தலைவர்களாக இன்றும் உள்ளனர். எனவே பொறுப்பற்ற வியாக்கியானங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி நியாயத்தை கடைப்பிடிக்குமாறு  நவ சம சமாஜக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்திற்கு சகலரினதும் ஒத்துழைப்பையும் வழங்குமாறும்  நவ சம சமாஜக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்படி போராட்டத்தை நவ சம சமாஜக் கட்சி, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய  சோஷலிசக் கட்சி, சோஷலிசக் கட்சி, தியச கல்வி வட்டம், ஜனநாயக செயற்பாட்டு  மையம் என்பவை ஒன்றிணைந்து நடத்த முன்வந்துள்ளன.

இன்றும் கூட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை ஏற்க மறுக்கும் ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத முத்திரையைக் குத்தி தமிழ் மக்களின் மனங்களை காயப்படுத்தவே முயல்கின்றனர்.

இந்த நாட்டில் 1971 இல் தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டம் நடந்துள்ளது. 1988 இலும் ஆயுதப் போராட்டம் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன், இலங்கை அரசியலில் முக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் இவர்களில் அநேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகள் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அடையாளம் காண்பாரானால் இன்றைய அரசியல் தளத்தில் உள்ளவர்களில் அநேகர் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்படுவர்.

இந்த நாட்டில் நடைபெற்ற ஆயுத கிளர்ச்சிகளில் சம்பந்தப்பட்டவர்கள் அரசியல் கட்சிகளில் முக்கிய தலைவர்களாக இன்றும் உள்ளனர். எனவே பொறுப்பற்ற வியாக்கியானங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி நியாயத்தை கடைப்பிடிக்குமாறு  நவ சம சமாஜக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எனவே சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தாக்கமான போராட்ட செயற்பாடுகள் அவசியமாகின்றது. எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெற இருக்கும் மேற்படி போராட்டத்திற்கு சகலரினதும் ஒத்துழைப்பை நவ சம சமாஜக் கட்சி எதிர்பார்க்கின்றது.' 

"'ஆயுதம் தூக்கியவர்கள் பயங்கரவாதிகளானால் அரசியல் தளத்தில் பலர் பயங்கரவாதிகளாக காணப்படுவர்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty