மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனரா?
24-05-2012 09:25 PM
Comments - 0       Views - 743
சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு இடைத்தரகர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்தினர்,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரினர் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் பிரதியமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் பொன்சேகாவின் குடும்பத்தினர், நேரடியாக கோரிக்கை விடுக்கவில்லை.

அவர்களுக்கு உதவியாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒருவரினூடாகவே அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தனர் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.
"மன்னிப்பு வழங்குமாறு பொன்சேகா குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனரா? " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty