தமிழ் மக்களுக்கான தீர்வு ஏனைய சமூகங்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும்: றிசாட்
24-05-2012 10:16 PM
Comments - 5       Views - 586

(றிப்தி அலி)

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். எனினும், குறித்த தீர்வு ஏனைய சமூகங்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவளிக்காமையினால் வட மாகாணத்திலிருந்து பல வந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள், தமிழ் தலைவர்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இந்த மீள்குடியேற்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாரிய பொறுப்புள்ளது. வட மாகாண முஸ்லிம்கள் விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டபோது அவர்களின் குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.

முஸ்லிம்களின் சொந்த காணிகளிலே அல்லது அரச காணிகளிலேயோ வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மத தலைவர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்?

புனர்வாழ்வு அமைச்சராக நான் செயற்பட்ட போது, தமிழ், முஸ்லிம் என்ற பாரபட்சம் காட்டாமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்தேன்.

எனது வாக்கு வங்கிக்கான இந்த உதவிகளை நான் ஒரு போதும் செய்யவில்லை. இதேபோன்று வட மாகாண முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டும்.

கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை ஒரு மணித்தியாலத்திற்கு மீள்குடியேற்றி விட முடியாது. காடுகள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றி மீளக்குடியேற்ற கால நேரங்கள் தேவைப்படும்.

எவ்வாறாயினும் இந்த வருட இறுதிக்கு வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டவர். இதற்கான உறுதிமொழிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது" என்றார். (படங்கள்:நிசால் பதுகே)

"தமிழ் மக்களுக்கான தீர்வு ஏனைய சமூகங்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும்: றிசாட்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (5)
Faazil 24-05-2012 07:35 PM
அமைச்சர் அவர்களே! உங்களுடைய கட்சியின் சின்னம் என்ன என்று கொஞம் சொல்லுங்க.
Reply .
0
2
naleem 25-05-2012 04:25 AM
சபாஷ் அமைச்சரே
Reply .
2
0
M.A.A.Rasheed 25-05-2012 10:09 AM
நியாயமான கோரிக்கை.
Reply .
2
0
xlntgson 26-05-2012 12:27 PM
SABASH POADUM POADHU IRU MAAHAANA KOARIKKAIYAI KAI VIDUMAARU EVVAARU KAETKA IYALUM ENRUM ADHARKKAANA VITTUK KODUPPU ENNA ENRUM YOASIKKA VENDUM, INDIA IDHIL URUDHIYAAKA IRUPPADHU NANGU THERIGIRADHU.
Reply .
0
0
makesh 26-05-2012 02:25 PM
தமிழர்களுக்குத் தீர்வு வழங்கும் ஆளும் கட்சியில் இருக்கும் நீங்கள் பயப்படலாமா? நீங்கள் கொடுக்கும் தீர்வையிட்டு தமிழர்கள் அல்லவா உங்கள் முன் கைகட்டி நிற்க வேண்டும்? என்ன இருந்தாலும் புத்திசாலிகளல்லவா நீங்கள்?
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty