சிறார்களுக்கு சமூகத்தில் உரிய இடம் வழங்காமையும் சிறார்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம்
29-05-2012 03:23 AM
Comments - 0       Views - 332

                                                                                          (ஒலிந்தி ஜயசுந்தர)

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணங்களாக, சிறுவர்களுக்கு சமூகம் உரிய இடத்தை கொடுக்கத் தவறியமை, சிறுவர்கள் மீதான குறைந்த சமூக செலவு, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதாமை என்பன அமைகின்றன என சிறுவர் நலன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நேற்று கூறினார்.

இப்போக்கு அதிகரிப்பதற்கு உலகளவிலான பொருளாதார நெருக்கடிகள் வழிவகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவு காணும் தென் ஆசிய முன்னெடுப்புகளின் பிராந்திய கூட்டத்தின் தொடர்நிகழ்வு ஒன்றில் பேசியபோதே அமைச்சர் இன்று இந்த கருத்தை வெளியிட்டார்.

சிறுவர் மீதான வன்முறைக்கு எதிரான பலமான கருத்தொருமைப்பாடு காணப்படினும் வன்முறையின் சில வடிவங்கள் இன்னும் தொடர்வதோடு அவை சமூகத்தினால் ஏற்கப்படுவனவாகவும் உள்ளன என அமைச்சர்கூறினார்.

"அரசாங்கத்தாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நடத்தப்படும் விழிப்புணர்வு பிரசாரங்கள் அநேகமாக நகரங்களுக்குள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அடிமட்ட மக்களை இந்த செய்திகள் சென்றடையும் வகையில் செயற்பட  வேண்டும்" என  அமைச்சர் கூறினார்.

"சிறார்களுக்கு சமூகத்தில் உரிய இடம் வழங்காமையும் சிறார்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty