'நியாயமான விலை, தரமான பசளை வழங்கப்படாதுவிடின் சிறுதேயிலை தொழிற்துறை கைவிடப்படும்'
31-05-2012 04:25 AM
Comments - 0       Views - 300
                                                                              (ஒலிந்தி ஜயசுந்தர)

தமக்கு நியாயமான விலை, மானியங்கள் மற்றும் தரமான பசளை என்பவற்றை அரசாங்கம் வழங்காது விடின், தேயிலை பயிரிடுவதை கைவிடப்போவதாக சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசாங்க உதவிகள் போதாமல் இருப்பதானால் தேயிலை கைத்தொழில் அழிந்து வருவதாக தேசிய சிறு தேயிலை தோட்ட உரிமையாளர் சம்மேளனம் கூறியது.

சிறு தோட்ட தேயிலை உற்பத்தி ஆண்டுதோறும் 150 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றது. இவற்றில் 3 மில்லியன் மக்கள் வேலை செய்கின்றனர். நாட்டின் தேயிலை உற்பத்தியில் 76 சதவீத சிறு தோட்டங்களில் விளைகின்றது.

"மஹிந்த சிந்தனை பசளை' எனக்கூறப்படும் தரக்குறைவான பசளை கொண்ட பக்கற்றுகளை அரசாங்கம் இப்போது விநியோகித்து வருகிறது. தேயிலை கைத்தொழில் நிலைத்திருப்பதற்கு சிறந்த தரத்திலான பசளை தேவை" என சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் லால் பிரேம்நாத் கூறினார்.

"தரமான பசளைகள் இடப்படும்போது தேயிலை செடிகள் 5 நாட்களில் வளர்ந்துவிடும். ஆனால் தற்போதைய சிந்தனைப் பசளையானது தேயிலைச் செடிகளை ஒரு இரவிலேயே பட்டுப்போகச் செய்கின்றன. இதனால் நாம் புதிதாக தேயிலைச் செடிகளை வளர்த்துஎடுக்க வேண்டியுள்ளது"என அவர் கூறினார்.

"அரசாங்கம் ஏக்கர் ஒன்றுக்கு 225,000 ரூபாவை மானியமாக வழங்குகிறது. இதுமொத்த செலவில் 13 சதவீதம் மட்டுமே. எமக்கு மொத்த உற்பத்தி செலவில 60 சதவீதத்தை மானியமாக வழங்க வேண்டும்"  என அவர் கூறினார்.

"'நியாயமான விலை, தரமான பசளை வழங்கப்படாதுவிடின் சிறுதேயிலை தொழிற்துறை கைவிடப்படும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty