எம்பிலிபிடியவில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு; இரு கொள்ளையர்கள் வைத்தியசாலையில்
31-05-2012 11:55 AM
Comments - 0       Views - 393
எம்பிலிபிட்டிய நகரில் அமைந்துள்ள வங்கியொன்றுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குட்டிகல பிரதேசத்தில் அமைந்துள்ள பலகைத் தொழிற்சாலையொன்றில் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த கொள்ளையர்கள் மீதே பொலிஸார் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, இருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த கொள்ளையர்கள், தங்களது கொள்ளை முயற்சி பயனளிக்காத நிலையில், அங்கிருந்து கார் ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
"எம்பிலிபிடியவில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு; இரு கொள்ளையர்கள் வைத்தியசாலையில் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty