சந்தேகத்திற்கிடமான பங்குக் கொள்வனவில் ஈ.பி.எவ். பணம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஜே.பி.பி.
31-05-2012 04:43 PM
Comments - 0       Views - 345

                                                          (யொஹான் பெரேரா)

கொழும்பு பங்குச் சந்தையில் சந்தேகத்திற்கிடமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பணத்தை பயன்படுத்துவதற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் கிறெய்ன் எலிவேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனததின் 10,000 பங்குகளை வாங்குவதற்கு ஊழியர் சேமலாபநிதியத்திலிருந்து (ஈ.பி.எவ்) 1.24 பில்லியன்  ரூபா செலவிடப்பட்டுள்ளதாக  ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இப்பங்குகள் தலா 245 ரூபா வீதம் வாங்கப்பட்டதாகவும் அப்பங்கின் விலை இன்று 36 ரூபாவாக குறைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இப்பங்குக் கொள்வனவானது ஊழியர் சேமலாப நிதியத்தின் விதிகளை மீறுவதாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஊழியர் நம்பிக்கை நிதிய பணமும் இவ்வாறான வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படுவதாகவும் தேசிய சேமிப்பு வங்கியும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்துன்நெத்தி கூறினார்.

"சந்தேகத்திற்கிடமான பங்குக் கொள்வனவில் ஈ.பி.எவ். பணம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஜே.பி.பி." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty