பள்ளிவாசல்களின் விபரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சேகரிப்பு
01-06-2012 03:24 PM
Comments - 4       Views - 1451
(யொஹான் பெரேரா)

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திலேயே பள்ளிவாசல்களை பதிவு செய்ய வேண்டும். அனுமதியற்ற வழிபாட்டு தலங்கள் முறியடித்தல் மற்றும் மத ரீதியான மோதல்களை தடுப்பதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் எண்ணிக்கை, அவற்றின் பெயர், பதிவு செய்யப்பட்டுள்ள காலம் உள்ளிட்ட பல தகவல்களை குற்றப்புலனாய்வு  பிரிவு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திடம் கோரியுள்ளது.

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை சென்ற குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் விபரங்களை கோரியுள்ளனர்.

இந்த தரவுகள் திரட்டல் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காகவே இடம்பெறுகின்றது என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எனினும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிலுள்ள அனைவரினதும் பெயர் முகவரி உள்ளிட்ட தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவு கோரியதாக வெளியான தகவல்களை உயர் அதிகாரி நிராகரித்தார்.

இது தொடர்பில்  புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் கசியொன் ஹேரத்தை தொடர்புகொண்டு வினவிய போது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஜயம் குறித்து தாம் அறியவில்லை என்றார்.

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை காலை தன்னை சந்தித்தபோது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பள்ளிவாசல்களின் தகவல்களை கோருவது உரிமை மீறலாகும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத உரிமை இதன் மூலம் மீறப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல்களின் விபரங்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோருவதனால் எந்த பிரச்சினையுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பிலுள்ள பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் தெரிவித்தார்.

அனைத்து சமயங்;களினதும் அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கோர வேண்டும். மாறாக, பள்ளிவாசல்கள் தொடர்பான தகவல்களை  மாத்தரம் கோருவது முஸ்லிம் சமூகத்திற்கு வருத்த்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
" பள்ளிவாசல்களின் விபரங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சேகரிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (4)
ramzeen 01-06-2012 12:48 PM
நல்லது இதுபோன்ற செயற்பாடு எல்லா சமய வழிபாட்டு தளத்துக்கும் பொருந்தும் என்றால் இது நீதியான நாடு என்பதை பறைசாட்டும்.
இல்லை என்றால் இலங்கை ????
Reply .
2
8
akeeb 02-06-2012 12:49 AM
என்ன பன்ன போறாங்க, என்று பொருத்திருந்து பார்ப்போம்இலங்கையில் இனி இஸ்லாம் விரைவாக பரவும்.
Reply .
0
5
xlntgson 03-06-2012 03:33 PM
Pirivu ullatthil aarambam aagiradhu, udhadu otrumaiyaip patri paesugiradhu!
Reply .
0
1
abd 03-06-2012 03:56 PM
30 வருசமா துரத்தித்துரத்தி மானை அடிச்சி வீழ்த்திட்டுது. கம்ஒன் கம்ஒன் என்டு பின்னாடி ஒடிய முயலை நோக்கி இப்போது தன் அகோரப்பார்வையை செலுத்துகிறது.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty