'அரசியல் தீர்வுக்கான ஜே.வி.பியின் முன்மொழிவுகள் தொகுதி முன்வைக்கப்படும்'
01-06-2012 10:17 PM
Comments - 1       Views - 464
(கெலும் பண்டார)

தேசிய பிரச்சினை என மக்கள் விடுதலை முன்னணி கருதுவதற்கு தீர்வு காணும் முகமாக நாட்டில் முன்வைக்கப்படவுள்ள ஒரு தொகுதி முன்மொழிவுகளில் நிர்வாக அதிகாரங்களை பரவலாக்குதல் மற்றும் ஜனநாயக, கலாசார உரிமைகளை மக்களுக்கு வழங்குதல் என்பவையும் அடங்கும் என ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக ஓர் அரசியல் தீர்வை பெறுவதற்காகவே ஜே.வி.பி. இதனை மேற்கொள்ளவுள்ளது.
தேசிய பிரச்சினையின் தீர்வாக நீண்ட காலத்திலும் குறுகிய காலத்திலும் பயன்படுத்த கூடிய வகையில் மக்கள் விடுதலை முன்னணி, முன்மொழிவுகள் தொகுதியொன்றை முன்வைக்கவுள்ளது என கட்சியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

ஆயினும் தெரிவுக்குழுவின் கருத்தாடலில் மக்கள் விடுதலை முன்னணி பங்குகொள்ளாது என அவர் கூறினார். இந்த பிரச்சினையை அறுதியும் இறுதியுமாக தீர்த்துவைப்பதற்கு நிர்வாக பரவலாக்கலும் மக்களின் ஜனநாயக கலாசார உரிமைகளை உறுதி செய்வதும் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார்.

மொழிக்கொள்கை பற்றி கூறிய போது, அரச மொழிகள் என்ற எண்ணக்கருவை மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். அரசுக்கென்று மொழி அல்லது சமயம் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

நாம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்பன தேசிய மொழிகள் என பிரகடணம் செய்யப்பட வேண்டும் என கூறுகின்றோம். ஒரு மொழிப் பிரிவினருக்கு எதிராக இன்னொரு மொழி பிரிவினரை பாகுபாடாக நடத்த கூடாது என அவர் தெரிவித்தார்.

யுத்தத்தினதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தலையும் மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதையும் தமது கட்சி வலியுறுத்த போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். 
"'அரசியல் தீர்வுக்கான ஜே.வி.பியின் முன்மொழிவுகள் தொகுதி முன்வைக்கப்படும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
pottuvilan 02-06-2012 04:12 PM
இதனை நீங்கள் பா.தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு தெரிவிக்கலாமே.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty