பேஸ்புக்மூலம் அறிமுகமாகிய பெண்ணை நிர்வாண படம்பிடித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டு குறித்து வழக்கு
02-06-2012 04:45 AM
Comments - 2       Views - 1420
                                                                                (லக்மால் சூரியகொட)

பேஸ் புக் மூலம் ஆசிரியை ஒருவருடன் நட்பாகி, அவரை விடுதியில் சந்தித்து நிர்வாண புகைப்படங்களை பிடித்த பின்னர் அப்புகைப்படங்களை  இணையத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி பாலியல் உறவு கொண்டதாக கூறப்படும் நபருக்கு எதிரான வழக்கை ஓகஸ்ட் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய இந்நபருடனான நட்பு, காதலாக மாறியதாகவும் செல்லிடத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இருவரும்  பம்பலப்பிட்டியிலுள்ள ஹோட்டலொன்றில் கடந்த வருடம் செப்டெம்பர் 17 ஆம் திகதி சந்தித்தாகவும் மேற்படி ஆசிரியை  கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்த அந்நபர், தன்னை நிர்வாணமாக படம்பிடித்தாகவும் மேற்படி ஆசிரியை தெரிவித்துள்ளார். அதன்பின் தன்னை அச்சுறுத்திய அந்நபருக்கு ஒரு தடவை 7000 ரூபாவும் மற்றொரு தடவை 4000 ரூபாவும் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்திய கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

தான் நிரபராதி என சந்தேக நபர் கூறினார். இது தொடர்பான வழக்கை ஓகஸ்ட் 3 ஆம் திகதிக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன ஒத்திவைத்தார்.


"பேஸ்புக்மூலம் அறிமுகமாகிய பெண்ணை நிர்வாண படம்பிடித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டு குறித்து வழக்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
bzukmar 02-06-2012 03:49 AM
நாடு நல்ல முன்னேற்றம்.
Reply .
0
2
xlntgson 04-06-2012 05:36 AM
"AKKAM PAKKAM PAARTTHU PAESU IRAVIL ENRAAL ADHUVUM PAESAADHE" TALIBANAI VIDAK KADUMAIYAANA MIRUGANGALUKKU IRUKKUM SUDHANDHIRAM SEXY AAGA MUNANGAK KOODA PORUKKAADHA KALAACHAARAM VALAIYIL EPPADI PINNIK KONDADHU ENBADHU PUDHINAME!
Reply .
1
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty