அனோமா பொன்சேகா மன்றத்தில் இணைய அதிக எண்ணிக்கையானோர் ஆர்வம்
02-06-2012 05:19 AM
Comments - 0       Views - 760
                                                         (ஒலிந்தி ஜயசுந்தர)

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையிலிருந்து இருவாரங்களுக்குமுன் விடுதலையானதையடுத்து,  தனது அனோமா பொன்சேகா மன்றத்தில்  இணைந்துகொள்ள பெரும் எண்ணிக்கையானோர் ஆர்வம் காட்டுவதாக திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

02.02.2011 ஆம் திகதி அனோமா பொன்சேகா மன்றத்தை அனேமா பொன்சேகா ஸ்தாபித்தார். இந்த மன்றத்தில் அங்கத்தவர்களாக இணைவோரின்  எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

'இம்மன்றத்தில் இணைய விரும்புவதாக கூறும் பலரின் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அடுத்த மாதம் புதிய அங்கத்தவர்களை சேர்க்கவுள்ளோம். இதில் பெரும் எண்ணிக்கையானோர் இணைவர் என எதிர்பார்க்கிறோம்' என அவர் கூறினார்.

அனோமா பொன்சேகா மன்றமானது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அது பின்தங்கிய மக்களுக்கு உதவுவதற்கான அமைப்பாகும். சரத் பொன்சேகா அதில் அங்கம் வகிக்கவில்லை எனவும் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

"அனோமா பொன்சேகா மன்றத்தில் இணைய அதிக எண்ணிக்கையானோர் ஆர்வம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty