நவநீதம்பிள்ளை மீது தமரா குற்றச்சாட்டு
08-06-2012 05:36 PM
Comments - 0       Views - 462
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்த தீர்மானத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அதீத ஆதரவு வழங்கியதன் மூலம்,  அவருக்கு வழங்கப்பட்ட பணியாணையை  மீறியுள்ளார் என  ஐ.நாவுக்கான இலங்கையின்நிரந்தர பிரதிநிதியான தூதுவர் தமரா குணநாயம் குற்றம் சுமத்தியுள்ளார்.  நவநீதம்பிள்ளைக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தமரா குணநாயகம் இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பொதுசபையின் 48/148 தீர்மானத்தால் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வழங்கப்பட்ட பணியாணைக்கு முரணாக நடந்ததால் உருவாகியுள்ள நிலைமைக்கு விளக்கம் அளிக்கும்படி இக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான அமெரிக்கா முன்னெடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் உயர்ஸ்தானிகரின் ஆசிய பசுபிக் பிரிவின் அலுவலக தலைமையதிகாரி றோறி மங்கோவென் அனுப்பிய மின்னஞ்சலை தூதுவர் குணநாயகம் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக காட்டியுள்ளார்.

22 மார்ச் 2012 திகதியிடப்பட்ட இந்த மின்னஞ்சல் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மும்முரமாக உழைத்த ஆணையாளரின் அலுவலகத்தை சேர்ந்த முக்கிய உத்தியோகத்தர்களின் சேவைகளை பாராட்டுகிறது. மங்கோவன் முன்னர் ஐநாவின் மனித உரிமைகள் ஆலோகசகராக இலங்கையில் பணியாற்றியவர்.

இலங்கை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை நடைமுறையை படுத்துவதிலும் ஆணையாளரின் அலுவலகம் பங்குகொள்ளவுள்ளது. இதன்போதும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது நடந்தது போல பாரபட்சமாக செயற்பாடுகள் காணப்படலாம் என தூதுவர் தமரா குணநாயகம் கருத்து வெளியிட்டுள்ளார்.

மங்கோவன் தனது கடிதத்தில், இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னின்று உழைத்த மனித உரிமை ஆணையாளரின் அலுவகத்தை சேர்ந்த முக்கிய நபர்களை பெயர்குறிப்பிட்டு அல்லது பதவியை குறிப்பிட்டு பாராட்டுவதையும் தனது குற்றச் சாட்டுக்கு ஆதாரமாக தமரா குணநாயகம் முன்வைத்துள்ளார்.

உரிமை மீறல்கள் தண்டிக்கப்படாது போகாமல் பார்த்துக்கொள்வதில் மனித உரிமை ஆணையாளரின் ஆளுமையும் அவரது பதவியும் வகிக்கும் பாத்திரத்தையிட்டு மங்கோவன் பெருமைப்படுவதாக கடிதத்தில் கூறியிருப்பதை தமரா குணநாயகம் மேற்கோள் காட்டியுள்ளார்.

இந்த மின்னஞ்சலானது, இது போலவே இனிவரும் காலங்களிலும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்கு தயாராகி வருவதை வெளிப்படுத்தியுள்ளது என தமரா தனது தனது  கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மின்னஞ்சலின் பிரகாரம் இலங்கை தொடர்பாக செயலாளர் நாயகத்தின் ஆலோசனை குழு முன்வைத்த பரிந்துரைகளை செயற்படுத்துவதிலும் திருமதி நவநீதம்பிள்ளை பங்குபற்றியுள்ளார் என தமரா குணநாயகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

'நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட பணியாணையை மீறி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதில் கணிசமான பங்காற்றியுள்ளீர்கள் என்பதை இந்த மின்னஞ்சலில் புலப்படுத்தியுள்ளது' என தமரா கூறியுள்ளார். மனித உரிமை கவுன்ஸிலின் தீரமானங்களை நிறைவேற்வதை தான் உங்கள் பணி. ஆனால், நீங்கள் எல்லை மீற அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அரசியலின் நிகழச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டுள்ளீர்கள் என தமாரா திருமதி நவநீதம்பிள்ளை மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலக ஊழியர்களின் பாரபட்சமின்மை, புறவயத்தன்மை, மனித உரிமைகள் மன்றத்தின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்தல் தொடர்பில் இந்த மின்னஞ்சலின் பாரதூரமான சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக தமரா குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருக்கு அளிக்கப்பட்ட பணியாணைக்கு மாறாக காணப்படும் இந்த நிலைமைகள் பற்றி விளக்கமளிக்கும்படி நான் கோருகின்றேன் என அவர் தனது கடித்தத்தில் கூறியுள்ளார்.

"நவநீதம்பிள்ளை மீது தமரா குற்றச்சாட்டு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty