இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு வெலிக்கடை தமிழ்ப் பெண் கைதிகள், அமைச்சுக்கு கடிதம்
08-06-2012 06:41 PM
Comments - 0       Views - 415
(என்.பரமேஸ்வரன்)

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகள், தங்களது இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி சிறைச்சாலைகள் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வெலிக்கடை பெண்கள் பிரிவில் பல வருடங்களாக நாம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்பொழுது தண்டனைக் கைதிகாளான எம்மை இடம்மாற்றம் செய்து கண்டி, பல்லேகல்ல எனும் இடத்திற்கு அனுப்பப் போவதாக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாம் மொழிப்பிரச்சினையால் அவதியுறுகின்ற நிலையில் புதியதொரு இடத்திற்கு மாற்றப்படும் போது தெரியாத இடத்தில் மேலும் பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.  

குறிப்பாக தமிழ் மொழியில் தேர்ச்சியற்ற அதிகாரிகளிடம் அனைத்து விடயங்கள் தொடர்பான கடிதங்கள் கொடுப்பதாலும் சிங்களத்திலே கொடுக்க வேண்டியுள்ளது. மற்றும் உறவினர்கள் பார்க்க வருவதும் சிரமமான விடயம். எல்லாவற்றையும் விட பாதுகாப்பு பிரச்சினைகளும் உண்டு.

எனவே எமது இடமாற்றத்தினை நிறுத்துவதுடன். ஏனைய விளக்கமறியல் கைதிகளினதும் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு போர் முடிவடைந்து 3ஆண்டு கடந்துவிட்ட நிலையில் எம் அனைவரினதும் (37 கைதிகள் பெண்கள் பிரிவு) நிரந்தர விடுதலையினையும் பெற்றுத்தர தங்களாலான உதவிகளை மேற்கொண்டு தருமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்' என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு வெலிக்கடை தமிழ்ப் பெண் கைதிகள், அமைச்சுக்கு கடிதம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty