ரெஜினோல்ட் குரே மீதான அச்சுறுத்தல் குறித்து தமிழகத்திடம் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்: ஐ.தே.க.
08-06-2012 10:37 PM
Comments - 0       Views - 475
தமிழ்நாட்டில் அமைச்சர் ரெஜினோல்ட் குரே எதிர்கொண்ட நிலைமை குறித்து தமிழ்நாடு மாநில அரசாங்கத்துக்கு அரசாங்கம் கவலை தெரிவிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தது.

அமைச்சர் ரெஜினோல்ட் குரேவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க கூறினார்.

'அரசாங்கம் இதை தீவிரமாக கருத்திற்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்நிலைமை எதிர்காலத்தில் நாட்டின் தலைவருக்கும் ஏற்படலாம்' என அவர் தெரிவித்தார்.

ரெஜினானோல்ட் குரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாடாளுமன்றமும் இவ்விடயத்தை தீவிரமாக கருத்திற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் முழு நாட்டினதும் கரிசனைக்குரிய விடயமாகும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர கூறினார்.
"ரெஜினோல்ட் குரே மீதான அச்சுறுத்தல் குறித்து தமிழகத்திடம் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்: ஐ.தே.க." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty