அதிபர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு - பொதுச்சேவை ஆணைக்குழு இழுபறி
13-06-2012 06:41 AM
Comments - 1       Views - 548
                                                                                             (கெலும் பண்டார)

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் சிபாரிசுகளை பொதுச் சேவை ஆணைக்குழு நியமித்துள்ளதையடுத்து கல்வித்துறையில் புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று கூறினார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தராதரம் கொண்டவர்களை மாத்திரமே தேசிய பாடசாலை அதிபர்களாக நியமிக்க முடியும் எனவும் ஆனால் இத்தகைய அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காரணமாக இந்நிபந்தனைக்கு புறம்பாக நியமனங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அனுமதியை  ஒரு மாதத்திற்கு முன்னர் தான் பெற்றுக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.

இதன்படி அதிபர் சேவையை சேர்ந்தவர்களையும் தேசிய பாடசாலை அதிபர்களாக நியமிக்க முடியும். எனினும் இதற்கிணங்க மேற்கொள்ளப்பட்ட சில நியமனங்களை பொதுச்சேவை ஆணைக்குழு நிராகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

"இது பாரதூரமான நிலைமை. பாடசாலைகளை இந்தவகையில் நடத்த நடத்த முடியாது. காலியில் மஹிந்த வித்தியாலயம் மற்றும் வித்தியாலோக வித்தியாலயம் ஆகியவற்றுக்கான அதிபர் நியமனங்களை பொதுச்சேவை ஆணைக்குழு நிராகரித்தபின் பாரிய நெருக்கடி ஏற்பட்டது.

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளே உள்ளனர். எனவே, அவர்கள் கல்விப் பணிப்பாளர்களாகவும் பாடங்களுக்கான பணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்"  என அமைச்சர் கூறினார்.

"அதிபர் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு - பொதுச்சேவை ஆணைக்குழு இழுபறி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
Dr I.M Javahir 13-06-2012 12:51 PM
அமைச்சரின் கருத்து மிக மிக சரியானது. தகுதியற்ற பலருக்கு கல்வி நிர்வாக சேவை வழங்கப்பட்டிருப்பதால் அவ்வாறானவர்களைக் கொண்டு தேசீய‌ பாடசாலைகளை நடத்துவது மிகச்சிரமமாய் உள்ளது. 1ம் தர அதிபர்கள் பொதுவாக அனுபவ ரீதியியாக த‌குதி பெறுவதால் அவர்கள் திறமையானவர்கவே காணப்படுகின்றனர்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty