கல்விசாரா ஊழியர்களின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை; பகிஷ்கரிப்பு தொடர்கிறது
13-06-2012 04:43 AM
Comments - 0       Views - 437

                                                              (ஒலிந்தி ஜயசுந்தர)

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இதனால்,  கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்ச்சியாக 7 ஆவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடரவுள்ளது.

கல்விசாரா ஊழியர்களுடனான இப்பேச்சுவார்த்தைகளில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தொழில் ஆணையாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொழில் அமைச்சர் காமினி லொக்குகேயுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கான கோரிக்கை விடுப்பதற்கு கல்விசாரா ஊழியர்களின் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சந்திரபால கூறினார்.  எனினும் அமைச்சர் நாட்டில் இல்லாததால் இச்சந்திப்பு சில நாட்கள் செல்லும் என அவர் தெரிவித்தார்.


"கல்விசாரா ஊழியர்களின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை; பகிஷ்கரிப்பு தொடர்கிறது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty