அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 53பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையிரால் கைது
13-06-2012 11:37 AM
Comments - 0       Views - 459
சட்டவிரோதமான முறையில் படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 53பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் இருவர் அடங்குவதுடன் ஏனையோர் உடப்பு, சிலாபம் மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, கிழக்கு கடற்பரப்பிலிருந்து சுமார் 60 மைல் தூரத்தில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான படகொன்றை கடற்படையினர் சோதனையிட்ட போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 10ஆம் திகதி மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
"அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 53பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையிரால் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty