துறைமுகத்தை ஆழமாக்கும் பணியினால் கொழும்பின் சில பகுதிகளில் நில அதிர்வு
15-06-2012 04:21 PM
Comments - 0       Views - 703
கொழும்பில் சில பகுதிகளில் இன்று காலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.சரத் லால் குமார தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தை ஆழமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் நிலத்துக்கு அடியில் வெடிப்புச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்த நில அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என்று புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பேராசிரியர் என்.பி.விஜயானந்த தெரிவித்தார்.

மேற்படி துறைமுக புனர்நிர்மாணப் பணிகளுக்காக இதுவரையில் 11 வெடிப்புச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இரு முறை மாத்திரமே இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டது என்றும் பேராசிரியர் கூறினார்.

இந்த வெடிப்புச் சம்பவங்கள் புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் ஆலோசனைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வெடிப்புக்களின் தன்மையை அளவிடுவதற்கான கருவிகள் துறைமுகப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு நிலையில் இடம்பெறும் அதிர்வினை பூமியதிர்ச்சியாகக் கொள்ள வேண்டாம் என்றும் பேராசிரியர் அறிவித்தார். (தரிந்து ஜயவர்தன)
"துறைமுகத்தை ஆழமாக்கும் பணியினால் கொழும்பின் சில பகுதிகளில் நில அதிர்வு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty