அரச ஊழியர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்கள்
16-06-2012 02:08 PM
Comments - 2       Views - 898
                                                                          (சந்துன் ஜயசேகர)

பெரும் எண்ணிக்கையான சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் மாகாண சபை  உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவுள்ளது.

2007 ஆம் ஆண்டிலிருந்து தீர்வையற்ற வாகனங்களை பெறாத சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் சுற்றுநிருபமொன்றை நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.ஏ. டயஸ் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார்.

அரச ஊழியர்கள் அனைவரும் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வருடம் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மாகாண சபை உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி  செய்வதற்கு அரசாங்கம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாக திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகன பெறுமதியின் உச்சவரம்பை அரசாங்கம் 35,0000 டொலர்களிலிருந்து 50,000 டொலர்களாக அதிகரித்தது.

அரச ஊழியர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் 25,000 டொலர்கள் வரை பெறுமதியான வாகனங்களை தீர்வையின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவர் என மேற்படி அதிகாரி கூறினார்.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி நேற்று 130.55 ரூபாவாக இருந்த நிலையில் இந்த வாகனங்களுக்கான தீர்வை நீக்கம் பொருளாதாரத்திற்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். அந்நிய செலாவணி கையிருப்பு  5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இத்தொகை 7 பில்லியனாக இருந்தது.
"அரச ஊழியர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்கள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
Gilly 16-06-2012 03:29 PM
அடித்தது வாசி. இன்னும் ஸ்ரீலங்காவில் விபத்து அதிகரிக்கும்.
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே???????????
Reply .
0
0
meenavan 16-06-2012 06:09 PM
தீர்வை அற்ற வாகனம் வெளிநாட்டு நாணய இருப்பில் ஏற்படுத்தபடும் பகல்கொள்ளை.......? வீட்டு பணிப்பெண்கள்,மற்றும் தொழிலாளர்கள் மூலம் சேமிக்கப்படும் அந்நிய செலவாணி, விரயமாக்கப்படுகிறது.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty