ஹம்பாந்தோட்டை துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கம்: ஜே.வி.பி.
16-06-2012 05:01 PM
Comments - 0       Views - 653
ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் பின்னால் அரசாங்கம் இருப்பதாக ஜேவி.பி. பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று குற்றம் சுமத்தினார்.  'அது தெளிவாக, அரசாங்கத்தின் வேலை எம்மிடம் அதற்கான ஆதாரம் உள்ளது' என அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்ககது.

இச்சம்பவத்திற்கு ஜே.வி.பியின் உள்கட்சி மோதலை காரணமாக காட்ட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் ஆனால் யதார்த்த நிலை அவ்வாறில்லை எனவும் ரில்வின் சில்வா கூறினார்.

"அவர்கள் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மீது குற்றம் சுமத்த முயற்சிக்கிறார்கள்.  வீதி நடைபாதையில் நடப்பதற்கு 2-3 பேரை தேடிக்கொள்ள முடியாத ஒரு கட்சி எப்படி துப்பாக்கிப் பிரயோகம் நடத்த முடியும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்விடயத்தை தமது கட்சி சர்வதேச  மட்டத்திற்கு கொண்டு செல்லும் என அவர் தெரிவித்தார். "நாம் ஜனநாயக ரீதியாக  அரசியலில் ஈடுபடுகிறோம்.  அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இத்துப்பாக்கிப்  பிரயோக விவகாரத்தை நாம் சர்வதேச ரீதியாக கொண்டு சென்று, இச்சம்பவத்தின் சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்த முயற்சிப்போம்" என அவர் தெரிவித்தார்.

"ஹம்பாந்தோட்டை துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கம்: ஜே.வி.பி." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty