இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. சலுகை
30-06-2012 11:46 AM
Comments - 0       Views - 552
இலங்கைக்கு தனது ஜி.எஸ்.பி. சலுகை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், இலங்கையில் தொழிலாளர் உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக பிரநதியான ரோன் கேர்க் இவ்வறிப்பை விடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்தள்ளது.

தொழிலாளர் உரிமைகளை அங்கீகரிப்பதில் இலங்கையின் குறைபாடுகள் காரணமாக 2008 ஆம்ஆண்டு ஏ.எவ்.எல்.மற்றும் சி.ஐ.ஓ அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை தொடர்ந்து இலங்கைக்கான ஜி.எஸ்.பி. சலுகை குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

'இலங்கையின் ஜி.எஸ்.பி. சலுகை நடைமுறை மீளாய்வு முடிவானது, கடந்த சில வருடங்களில் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான விவகாரங்களை தீர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்தின் கவனிக்கத்தக்க முயற்சிகளின் அடிப்படையில் அமைந்தது. பயன்பெறும் நாட்டின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் ஜி.எஸ்.பி. சலுகை ஒரு வினைத்திறனான கருவியாக உள்ளது என்பதை இந்த மீளாய்வின் இந்த வரவேற்கத் தக்க பெறுபேறானது வெளிப்படுத்துகிறது என ரோன் கேர்க் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.பி. சலுகை மூலம் அபிவிருத்தியடைந்துவரும் 128 நாடுகளைச் சேர்ந்த 5000 வகையான பொருட்களை தீர்வையின்றி அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. சலுகையின்கீழ் 18.5 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் தீர்வையின்றி இறக்குமதி செய்யப்பட்டன.

"இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. சலுகை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty