ஊடகங்கள் மீதான தொந்தரவுகள் குறித்து அமெரிக்கா கவலை
30-06-2012 04:08 PM
Comments - 0       Views - 725
ஸ்ரீலங்கா மிரர் மற்றும் லங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தள ஊழியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டமை உட்பட மேற்படி இணைத்தளங்கள் தொடர்பான விவகாரத்தை அமெரிக்கத் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி இணையத்தளங்களை முடக்குதல், அச்சுறுத்தல், ஊடகவியலாளர்கள் காணாமல் போதல் உட்பட சுயாதீன செய்தி ஊடகங்களை மீதான ஒடுக்குவதற்கான முயற்சிகள் தொடர்பாக பல தடவை நாம் எமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளோம்.

தணிக்கை செய்யப்படாத சுயாதீன ஊடகம் அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்கக்கூடியதாக இருப்பது துடிப்பான ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாது அம்சம் என அமெரிக்கா நம்புகிறது. இந்த மற்றும் ஏனைய அனைத்து ஊடகவியலாளர்கள் மீதான தொந்தரவுகள் நிறுத்தப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஊடகங்கள் மீதான தொந்தரவுகள் குறித்து அமெரிக்கா கவலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty