வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் எலும்புக்கூட்டை ஆராய்வதற்காக கேம்பிரிட்ஜ் நிபுணர்கள் இலங்கை விஜயம்
30-06-2012 04:54 PM
Comments - 2       Views - 1094
                                                                                   (ஹபீல் பரீஸ்)

அண்மையில் பாஹியங்கலையில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மனிதனின் எலும்புக்கூடு தொடர்பாக ஆராய்வதற்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் மானுடவியலாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளது.

மேற்படி சடலத்தின் எச்சங்கள் தொடர்பாக இக்குழுவினர் உயர் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வர் என தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வுப் பணிப்பாளரான கலாநிதி நிமல் பெரேரா கூறினார்.

அத்துடன் மேற்படி, சடலம் காணப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மண்ணின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஆய்வுக்கூடமொன்றுக்கு ஆய்வுகளுக்காக விரைவில் அனுப்பப்படவுள்ளதாகவும் கலாநிதி நிமல் பெரேரா கூறினார்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய மனிதனின் எலும்புக்கூடு எனக் கருதப்படும் மேற்படி எலும்புக்கூடானது களுத்துறையில் பாஹியங்கல பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதனின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் தஸநாயக்க கூறினார்."வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் எலும்புக்கூட்டை ஆராய்வதற்காக கேம்பிரிட்ஜ் நிபுணர்கள் இலங்கை விஜயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (2)
ibnuaboo 30-06-2012 02:50 PM
முதல் மனிதர் ஆதம் நபி -கிறிஸ்துவத்தில் அடம் என்பர் இவர் சொர்கத்தில் இருந்து வெளியிறக்கப்பட்டு இலங்கையில் தான் இறக்கிவைக்கப்பட்டார் என்ரு வரலாற்றில் ஒரு குறிப்புண்டு. சிவனொளிபாதம் என்றலைக்கப்படும் மலை உச்சியில் தான் அவர் இறைவனிடம் பாவ மன்னிப்பு வேண்டி வருடக்கணக்காய் மன்றாடினாராம். இந்த இடம் ஆங்கிலதில் அடம்ஸ்பீக் என்றழைக்கபடுவதும் சிந்திக்க வேண்டியுள்ளது.முதல் மனிதர் ஆதமின் மகன் காபில் கெயின்.
Reply .
1
0
sivanathan 01-07-2012 03:47 AM
இங்கும் இன வாதம் தலை துக்குமா.
Reply .
0
1
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty