'பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என ஜனாதிபதியின் செயலாளர் ஏற்றுக்கொண்டார்'
05-07-2012 05:01 AM
Comments - 0       Views - 801
                                                                                     (சுபுன் டயஸ்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தமது கோரிக்கைகளை ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் நிர்மல் தேவசிறி கூறினார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுடன் நேற்று சுமார் மணித்தியாலமாக நடந்த கலந்துரையாடலின் பின்னர் தேவசிறி இவ்வாறு கூறினார்.

களனி மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களை தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழங்களில் நேற்று பணிப்பகிஷ்கரிப்பது நடைபெற்றது எனவும் தமது கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை ரீதியில் பகிஷ்கரிப்பு தொடரும் எனவும்  அவர் தெரிவித்தார்.

"'பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என ஜனாதிபதியின் செயலாளர் ஏற்றுக்கொண்டார்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty