புள்ளிவிபரங்களின்படி குற்றச்செயல்களில் அதிகரிப்பு இல்லை: கோட்டாபய
23-07-2012 01:11 PM
Comments - 1       Views - 736
புள்ளிவிபரங்களின்படி, குற்றச்செயல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குற்றவாளிகளை கைது செய்வதற்காக, அறிக்கையிடப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்துவர் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தலையீடுகள் இன்றி, தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டுமென பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (சுபுன்டயஸ்)

"புள்ளிவிபரங்களின்படி குற்றச்செயல்களில் அதிகரிப்பு இல்லை: கோட்டாபய" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
Kanavaan 23-07-2012 04:59 PM
ஐயா உங்களின் புள்ளி விபரங்களின்படி நிச்சயமாக குற்றச் செயல்களில் அதிகரிப்பே இருக்க முடியாது. இது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty