ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் கொள்வனவு
23-07-2012 07:23 PM
Comments - 1       Views - 832

எம்.ஐ - 171 ரக 14 ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இதற்கான கொள்வனவுக் கட்டளை ரஷ்யாவின் ரொசோபொரன் எக்ஸ்போர் கம்பனியிடம் கையளிக்கப்பட்டுள்ளது என அக்கம்பனி அறிவித்துள்ளது.

10 வருட கடன் அடிப்படையில் 30 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உல்லாசப் பயணத்துறைக்காக இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய – ரொய்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படை ஹெலிடுவர்ஸ்' என்ற பெயரில் உல்லாசப் பயணச் சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (திஸ்ஸ மடவல)
"ரஷ்யாவிடமிருந்து 14 ஹெலிகள் கொள்வனவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
meenavan 23-07-2012 02:18 PM
30 கோடி அமெரிக்க டொலர்= 3900 கோடி இலங்கை ரூபாய் இவ்வளவு பெரிய முதலீடு கலாசார சீர்கேட்டை மேலும் ஊக்குவிக்குமே ஒழிய, நாட்டின் அபிவிருத்தியில் ஏற்படுத்தும் தாக்கமானது மக்களின் வரிப்பண விரயத்துடன் மக்களது வாழ்க்கை சுமையுமே ஆகும்.
Reply .
0
5
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty