அரசாங்கத்திற்கு ஹெலிகொப்டர் பித்து பிடித்துள்ளது: கருஜயசூரிய
08-08-2012 06:02 PM
Comments - 1       Views - 578
அரசாங்கத்திற்கு ஹெலிகொப்டர் பித்துபிடித்துள்ளதாகவும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்னெப்போதுமில்லாத வகையில் அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினரான கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போன்று குறுகிய தூர பயணங்களுக்குகூட அவர்கள் ஹெலிகொப்டர்களை பயன்படுத்துகின்றனர் என  கரு ஜயசூரிய கூறினார்.

வெளிநாட்டு கடன்கள் மூலம் மேலும் 14 ஹெலிகொப்டர்களை அரசாங்கம் வாங்கவுள்ளது. யுத்தம் முடிந்த நிலையில் இது பொதுச்சொத்தை விரயமாககும் நடவடிக்கையாகும். யுத்தத்தின் பின்னர் இவ்வளவு அதிக எண்ணிக்கையான ஹெலிகொப்டர்களை வாங்குவது அவசியமா? சுற்றுலாத்துறை தேவைக்காக அரசாங்கம் ஹெலிகொப்டர்களை வாங்குகிறது என்பதை மக்கள் நம்பத் தயாரில்லை' என அவர் கூறினார்.

17 ஆவது திருத்தச்சட்டம் இல்லாத நிலையில் நீதியான, சுதந்திரமான தேர்தலை உத்தரவாதப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார். 'நீதியான சுதந்திரமான தேர்தலுக்கு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு அவசியமாகும். தற்போதைய அரசாங்கத்தில் தேர்தல் திகதியை நியமிப்பவர் தேர்தல்கள் ஆணையாளர் அல்லர், சோதிடர்களே இத்திகதிகளை நியமிக்கின்றனர்' என அவர் கூறினார். (அஜித் சிறிவர்தன)


"அரசாங்கத்திற்கு ஹெலிகொப்டர் பித்து பிடித்துள்ளது: கருஜயசூரிய" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
shana 08-08-2012 01:47 PM
சார் யூ என்பி ஆட்சியிலையும் கூட இதுதானுங்கோ நடந்தது.
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty