மரியதாஸ் டில்ருக்ஷன் படுகொலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு: மனோ கணேசன்
08-08-2012 09:31 PM
Comments - 1       Views - 452
வவுனியா சிறைச்சாலை சம்பவத்தில் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு நேற்று உயிழந்த மரியதாஸ் டில்ருக்ஷனின் படுகொலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த மரணம் தெருவில் நடந்தது அல்ல. வழமையாக சொல்வதைபோல், விசாரணைகள் நடக்கின்றன, கொலையாளிகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி அரசாங்கம் தப்ப முடியாது. இந்த படுகொலை அரசாங்கத்தின் பாதுகாவலுக்கு உட்பட்ட, சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றுள்ளது என்பதுடன் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலும் வைத்தியசாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படை உண்மையை அரசாங்கம் மறைக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த யாழ்ப்பாணம் பாஷையூரை பிறப்பிடமாக கொண்ட தமிழ் அரசியல் கைதி மரியதாஸ் டில்ருக்ஷனின் மரணம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன...

மரியதாஸ் டில்ருக்ஷன் கடைசிவரை சுய நினைவற்ற நிலைமையில் இருந்துள்ளார். இந்நிலையிலும் அவரது கால்களை சங்கிலியால் பிணைத்து அவர் படுத்திருந்த வைத்தியசாலை கட்டிலுடன் பிணைக்கப்பட்டு இருந்தது. இந்த உண்மை அரசியல் கைதிகள் மீது காட்டப்படும் கொடூரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், தாக்குதலுக்கு பிறகும் முறையான வைத்திய சிகிச்சைகள் இல்லாமல் சாக விடப்பட்டுள்ளார்கள் என்று நாம், வவுனியாவில் நடைபெற்ற நிமலரூபனின் மரணசடங்கின் போது சொன்ன உண்மை இன்று டில்ருக்ஷனின் மரணத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல், யுத்தம் முடிந்து மூன்று வருடங்களின் பின்னரும் இந்த அரசாங்கம் - தமிழர் மீது பழி வாங்கும் எண்ணத்தை கைவிடவில்லை என்ற உண்மையும் நிரூபணமாகியுள்ளது.
"மரியதாஸ் டில்ருக்ஷன் படுகொலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு: மனோ கணேசன்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
chandru 09-08-2012 12:47 AM
பதில் கொடுக்க வேண்டிய கலம் ..........
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty