நான்கு மாதங்களில் 10,000 ஏக்கர் காடு தீக்கிரை
18-08-2012 06:43 AM
Comments - 0       Views - 591
                                                                                (நபீலா ஹுஸைன்)

வேட்டைக்காகவும், சட்டவிரோத சேனைப் பயிர்செய்கைகளுக்காகவும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று தெரிவித்துள்ளது.

காடுகளுக்கு தீ மூட்டுவோரை கையும் மெய்யுமாக பிடிப்பது முடியாத காரியமாக உள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடக பணிப்பாளர் சரத் லால் குமார கூறினார்.

இதுவரையில் பதுளையில் இருவரும் மொனராகலையில் ஒருவரும் மட்டும்தான் கைதாகி உள்ளனர் என அவர் கூறினார். எமது காடுகளை மாத்திரமன்றி அங்கு காணப்படும் நீரூற்றுக்கள், அருவிகளையும் இதனால் இழக்க வேண்டியுள்ளது. தீயை அணைக்க பயன்படுத்தப்படும் வளங்களும் பெரும் விரயமாகும் என சரத் லால் குமார கூறினார்.

"நான்கு மாதங்களில் 10,000 ஏக்கர் காடு தீக்கிரை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty